Kanda Shasthi Vratam (கந்த சஷ்டி விரதம்)

Skanda Shasti or Kanda Shasthi Vratam is an important observance dedicated to Lord Muruga. It is observed in the Tamil month of Aippasi and most devotees fast during the 6-day period. 


How to observe fasting for God Muruga:

There is no common method of Skanda Shasti fasting. Different devotees observe it differently. But there are some basic rules followed by all the devotees. 

  • Non-vegetarian food is completely avoided during the period. 
  • Some people also avoid garlic and onions. 
  • Those who are observing the fast make it a point to read scriptures related to Lord Muruga or recite the Kanta Shasti Kavasam or Subramaniya Bhujangam. 
  • Most devotees also visit Skanda temples during the period. 
  • When it comes to Kanda Shasti fasting, some devotees only take a single meal a day. 
  • Some take the meal at noon and others at night. 
  • Some devotees confine to fruits and juices during the 6-day period. 
There are several Skanda devotees who see the Vratam as an opportunity to clean the body and get rid of unwanted toxic elements. Such devotees confine to water, coconut water and other fruit juices.  


The fasting ends on the Sixth day. 

It must be noted that ‘Vrata’ or ‘Vratam’ in Sanskrit means ‘vow.’ Vratam should not be misunderstood as mere fasting. By observing a Vratam a person is trying to purify his mind through meditation, worship and by sticking to some ‘vow’ that he/she has taken. Now, this vow can include fasting, not telling lies, not getting anger etc. A vratam should be seen as a deliberate attempt on your part to bring back discipline into your life. 

Fasting should be voluntary and it should not be done unwillingly. If you are taking medicines, do not observe intense fasting and stick to the routine suggested by your doctor.

Mythology of Kanda Shasti:

The Skanda Shasti Vrat is believed to be highly beneficial and is observed mainly by Tamil speaking people. The Shasti vrat is also famous in Kerala.
Legend has it that Muchukunda, a King South India, was advised by sage Vasishta regarding the correct observances of the Skanda Sashti Vrata. After observing the Vrata, King Muchukunda became powerful and famous and the fame of his kingdom spread around the three worlds. It is said that the King became so powerful that Lord Indra took his help to defeat Asuras.
Skanda, son of Lord Shiva, symbolizes valor and is often referred as the General of the Army of Devas. His birth was primarily to annihilate the demons that had crated mayhem on earth.
Legend has it that Skanda killed Demon Surapadma (Soorasamharam) on the sixth day of the battle with his ‘Vel’ or lance. The fasting of Skanda Shasti begins on the Pradma Thithi after Deepavali. During the fasting period, devotees confine to a single meal. Some people only fast on the Soorasamharam day. The fasting ends with the Tirukalyanam on the next day.

How to perform Skanda Shasti Puja at home ?


முருகனுக்குரிய விரதங்களில் இதுவே தலைமையானது. ஒப்பற்றது. இதனைச் சுப்பிரமணிய சஷ்டி விரதம் என்றும் அழைப்பர்- இது திதி விரதம். `சங்கரன் பிள்ளை சட்டியிலே மாவறுத்தான்' என்று வேடிக்கையாகக் கூறுவார்கள். முருகன் சட்டியிலே மாவை  வறுத்தானாம்! உண்மைதான்.

அவன் சட்டியிலே, சஷ்டி திதியிலே, மா அறுத்தான் = மாமரமாக நின்ற சூரபத்மனைத் அறுத்தான். முருகன் சூரபத்மனுடன் ஆறு நாள்கள் தொடர்நது போரிட்டான். ஆறாம் நாள், மாமரமாகி எதிர்த்துப் போரிட்ட அவனைத் தனது வேலாயுதத்தால் பிளந்தான்.

பிளந்த ஒரு கூறு மயிலாயிற்று. முருகன் அதைத் தன் வாகனமாக ஏற்றான். மறு கூறு சேவலாயிற்று. அதைத் தன் கொடியாக ஏந்தினான். ஐப்பசி மாதம் அமாவாசைக்கு மறுநாள், அதாவது தீபாவளிக்கு மறுநாள்- பிரதமையில் விரதத்தைத் தொடங்கித் தொடர்ந்து சஷ்டி வரை ஆறுநாள்கள் முருகனை வழிபட்டுக் கடும் விரதம் காப்பது `கந்த சஷ்டி விரதம்' இதனை `மகா சஷ்டி விரதம்' என்றும் கூறுவர்.

வழிபாடு: 

ஆறு நாள்களிலும், காலையில் நீராடி, ஆறு காலங்களிலும், ஆறுமுகனுக்குப் பூஜைகள் செய்ய வேண்டும். கோவில்களுக்குச் சென்று முருகனை வழிபட வேண்டும். கந்த சஷ்டி கவசம், கந்த குரு கவசம், சண்முக கவசம் முதலான கவச நூல்களைப் பயிலலாம்.

திருப்புகழ், கலந்தரலங்காரம், கந்தரநுபூதி முதலிய நூல்களை ஓதலாம். `சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்' என்பது ஒரு மொழி. சட்டியில் = சஷ்டி திதியில், இருந்தால் = விரதமிருந்தால்; அகப்பையில் = கருப்பையில்;

வரும் = கரு தோன்றும். அதாவது மகப்பேறில்லாத மகளிர் சஷ்டி விரதமிருந்து முருகனை வழிபட்டால், அவனது அருளால் மகப்பேறு நிச்சயம் கிடைக்கும் என்பது கருத்து. குமார சஷ்டி விரதம் ஆனி மாதம் வளர்பிறையில் வரும் சஷ்டியும், கார்த்திகை மாதம் வளர்பிறையில் வரும் சஷ்டியும் குமார சஷ்டி விரதம் எனப்படும்.

கார்த்திகை மாத வளர்பிறைக்கு குமார சஷ்டியைச் `சுப்பிரமணிய சஷ்டி' என்றும், `அனந்த சுப்பிரமணிய பூஜை' என்றும் கூறுவர். அனந்த சுப்பிரமணிய பூஜை: அனந்தன் = நாகம். `சுப்புராயன்' என்ற பெயர் முருகனையும், நாகப்பாம்பையும் ஒருங்கே குறிப்பிடுகிற பெயராம்.

திருமணமாகி நீண்ட காலம் மகப்பேறில்லாதவர்கள் அனந்த (நாக) சுப்பிரமணிய பூஜையை நிறைவேற்றினால் மகப்பேறு நிச்சயம் கிடைக்கும்.  முருகனைப் பாம்பு வடிவத்தில் வழிபடலாம். அல்லது, இணைந்த இரு பாம்புகளுக்கிடையில் அமைந்த முருகனையோ, பாம்பின் முடிமீது அமைந்த முருகனையோ வழிபட்டால் நாக தோஷங்களும், பிற தோஷங்களும் விலகும்.

நாக சுப்பிரமணியர் வழிபாடு கர்நாடகத்தில் அதிகமாக உள்ளது. இத்தகைய வடிவம் எளிதில் கிடைக்காது. இதற்கு நிகராக இரு தேவியருக்கு இடையில் எழுந்தருளிய முருகனை வழிபடலாம். பக்தர்கள் மகப்பேற்றை வேண்டினால் முந்தி வந்து அருள் புரிபவன் முருகன். அவனே குழந்தையாக வடிவெடுத்து வருவான் என்றும் நம்புகின்றனர்.